வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பி பூட்டிய வீட்டிற்குள் நள்ளிரவில் தீ விபத்து

சேலம் கிச்சிப்பாளையம் நடராஜர் பஜனை மடம் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி (60). சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில், பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டின் மேல்மாடியில் உள்ள ஒரு அறையில் பழைய பேப்பர் மற்றும் பழுதடைந்த பொருட்களை வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து பழனிசாமி அங்க சென்று பார்த்தபோது, அறைக்குள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்ததில், அறையில் மின்கசிவு ஏற்பட்டு, பேப்பர் மற்றும் பொருட்கள் தீப்பிடித்தது தெரியவந்தது.

Related Stories: