×

திருச்சுழியில் பெண்களுக்கான கபடி போட்டி

திருச்சுழி, மார்ச் 22: திருச்சுழியில் வளரிளம் பெண்களுக்கான கபாடி திருவிழா நடைபெற்றது. மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்ணுரிமை மீட்டெடுத்தல் மற்றும் இளவயது கட்டாய திருமணத்தை தடுக்கும் நோக்கத்தை மையமாக கொண்டு, வளரிளம் குழந்தைகளுக்கான கபடி திருவிழா திருச்சுழி ஆர்.சி.பி.டி.எஸ் நிறுவன மைதானத்தில் நடைபெற்றது. இந்த கபாடி திருவிழாவினை சில்ரன் பிலிவ்வில் உதவி பெறும் ஸ்பீச் தொண்டு நிறுவனம் நடத்தியது.
ஸ்பீச் மக்கள் தொட ர்பு அலுவலர் பிச்சை தலைமை தாங்கினர். ஸ்பீச் பணியாளர் காயத்ரி வரவேற்றார்.

திருவிழாவை திருச்சுழி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பால்பாண்டி தொடங்கி வைத்தார். திருச்சுழி காவல் நிலைய பெண் காவலர் அழகு பாண்டி பெண் பாதுகாப்புக்கான 181 மற்றும் 1098 எண்கள் குறித்து பேசினார். இந்த கபடி திருவிழாவில் பச்சேரி, எம்.ஜி.ஆர் காலனி திருச்சுழி, இறைசினம்பட்டி மற்றும் கீழப்பட்டி ஆகிய கிராமங்களை சார்ந்த வளரினம் குழந்தைகளை உள்ளடக்கிய 4 குழுக்கள் பங்கு பெற்றனர். போட்டியில் பெண் உரிமை மீட்பு கபடி குழு முதல் இடத்தையும், பெண் பாதுகாப்பு கபடி குழு இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற குழுவிற்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்களை ஸ்பீச் நிதி இயக்குனர் செல்வம் வழங்கினார். விழாவில் ஸ்பீச் திட்ட கள அலுவலர் சுரேஷ், சுரேந்தர், ஸ்பீச் ஆவண அலுவலர் பழனிக்குமார், திட்ட மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளர்கள், கிராம அமைப்பு பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். ஸ்பீச் திட்ட மேலாளர் காளிராஜ் நன்றி கூறினார்.

Tags : Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....