×

முல்லையாற்றில் தண்ணீர் திருட்டு ஆய்வு செய்ய கோரிக்கை

உத்தமபாளையம். மார்ச் 22: உத்தமபாளையம் பகுதியில் முல்லையாற்றில் நடக்கும் தண்ணீர் திருட்டை தடுக்க, பொதுப்பணித்துறை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் பகுதியில் முல்லைப்பெரியாற்றிலிருந்து அனுமதியின்றி தண்ணீர் திருடுவதாக, கடந்தாண்டு புகார்கள் எழுந்தன. இதையடுத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இது குறித்து ஆய்வு செய்து ஆற்றங்கரையோர மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால், தண்ணீர் திருட்டு குறைந்தது. இந்த நிலையில் முல்லையாற்றில் மீண்டும் தண்ணீர் திருட்டு நடப்பதாக புகார் எழுந்தது. தற்போது கோடைக்காலம் என்பதால், ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லை. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் லோயர்கேம்ப், கூடலூர், மற்றும் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் ஆகிய இடங்களில், பெரியாற்றின் கரை ஓரப்பகுதிகளில் ஆய்வு செய்து தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags : Mullaiyar ,
× RELATED வீரபாண்டி தடுப்பணையில் குளித்து மகிழ...