ஊட்டி, மார்ச் 22: நீலகிரி மாவட்டத்தில் 6 வயது வரையிலான குழந்தைகளில் ஆரோக்கியமான குழந்தையை கண்டறியும் முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கிய நிலை கண்டறியும் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கிய நிலையினை கண்டறியும் சிறப்பு முகாம் துவக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் 27ம் தேதி வரை நடைபெறும். முகாமில் குழந்தைகள் எடை, உயரம் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் அளவீடு செய்யப்படும்.முகாமின் மூலம் 51 ஆயிரத்து 588 குழந்தைகளின் ஆரோக்கிய நிலை கண்டறியப்படும், என்றார்.