×

ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா

ஊட்டி, மார்ச் 22: ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா துவங்கிய நிலையில், நேற்று ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். ஊட்டியில்  உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் ஒரு மாதகாலம் கொண்டாடப்படும். நாள்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி  உலா வருவது வழக்கம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் இந்த  வீதி உலா நடத்தப்படும். இந்நிலையில் கடந்த 19ம் தேதி  பூச்சொறிதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம்  காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முதல் வீதி உலா துவங்கியது.
 
நேற்று நீலகிரி மாவட்டம் ஒக்கிலியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சார்பில்  புலி வாகனத்தின் அம்மன் ஆதிபராசக்தி அலங்காராத்தல் வீதி உலா வந்தார்.  பிற்பகல் 2.30 மணிக்கு மாரியம்மன் கோயிலில் துவங்கிய தேர்வபனி கமர்சியல்  சாலை, காபி அவுஸ், லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் வழியாக வந்தது.  தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள்  கலந்துக் கொண்டனர். மேலும், தொள்ளு குனிதா நடன நிகழ்ச்சி மற்றும் செண்டை  மேளம் முழங்க அம்மன் வீதி உலா வந்தார்.

Tags : Amman Street ,Adiparasakthi ,
× RELATED ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில்...