×

இந்துஸ்தான் கல்லூரியில் விதை பந்து தயாரிக்கும் பணி

கோவை, மார்ச் 22: கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றம், முதுகலை மற்றும் ஆராய்ச்சி உயிரி தொழில் நுட்ப வியல் துறை சார்பில் உலக வன தினத்தையொட்டி விதை பந்துகள் தயாரிக்கும் பணி நடந்தது. இதில் இந்துஸ்தான் கல்வி அறிக்கட்டளை அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக அறங்காவலர் பிரியா சதீஷ் பிரபு, கல்லூரி முதல்வர் பொன்னுச்சாமி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி உயிரி தொழில் நுட்பவியல் துறை தலைவர் ராஜலட்சுமி, பாரதி, இயற்கை பாதுகாப்பாளர் ராஜேந்திரன் உட்பட கலந்து கொண்டனர். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியின் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்கு காடுகள் முக்கியம். காடுகளை மீண்டும் உருவாக்கவேண்டியது அவசியம். பூமி மற்றும் கால நிலை மாற்றங்களை காக்க முக்கியமான மர இனங்களை உருவாக்கவேண்டும் என இந்த விழாவில் வலியுறுத்தப்பட்டது.

Tags : Hindustan College ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு அனிமேஷன்...