நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை அரசு மாவட்ட மைய நூலகத்தில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு மாதிரி தேர்வு

திருச்சி, மார்ச் 19: திருச்சி மாவட்ட மைய நூலகம், என்.ஆர் ஐ.ஏ.எஸ்.அகாடமி இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-II, தொகுதி-IIA தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு மாதிரி தேர்வு மாவட்ட மைய நூலகத்தில் 21ம் தேதி திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. மாதிரி தேர்வை எழுத விருப்பமுள்ளவர்கள் மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 0431 2702242 என்ற போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு இன்று (19ம் தேதி) மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்பவர்கள் மட்டுமே மாதிரித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Related Stories: