×

சாஸ்த்ரா சட்டப்பள்ளி மாணவருக்கு 50ஆயிரம் அமெரிக்க டாலர் கல்வி உதவித்ெதாகை கிடைக்கிறது

தஞ்சை, மார்ச் 19: தஞ்சை சாஸ்த்ரா சட்டப்பள்ளியின் BBA LLB(Hons) இறுதியாண்டு மாணவர் எல்.கே. ஸ்வராஜ், என். ஆர். மாதவமேனர் மாதிரி நீதிமன்ற போட்டி 2021-22ல் கலந்து கொண்டு சிறந்த மாணவர்- வழக்கறிஞர் பரிசை வென்றார். இப்பரிசை வென்றதன் மூலம் இவருக்கு அமெரிக்காவில் ெபன்ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் LLM பட்டப்படிப்பை மேற்ெகாள்ள 50,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சாஸ்த்ரா சட்டப்பள்ளி இந்த உதவித்ெதாகையை பெறுகிறது. என்.ஆர். மாதவமேனன் மாதிரி நீதிமன்ற போட்டிகள் SAARC நாடுகள் மத்தியில் நடைபெறும் மிக முக்கிய போட்டியாகும்.

இப்போட்டியில் முன்னர் தேர்வான கிரண்(2017) மற்றும் ரேவந்த்(2019) ஆகியோர் LLM படிப்பை வெற்றிகரமாக முடித்து இந்தியாவில் வழக்கறிஞர்களாக பணியாற்றுகின்றனர். SILF எனப்படும் இந்திய சட்ட நிறுவனங்களின் சங்கமும், MILAT எனப்படும் மேனன் சட்டப்பயிற்சி நிறுவனமும் இணைந்து இந்த கல்வி உதவித்தொகையை வழங்குகின்றன. இந்த உதவித்தொகையை பெறும் மாணவர், மூத்தநீதிபதிகள் அடங்கிய நடுவர் குழுவால் நடத்தப்படும் கடுமையான நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்.

Tags : Shastra Law School ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...