×

கறம்பக்குடி அரசு மகளிர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

கறம்பக்குடி, மார்ச் 19: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட உதவி அலுவலர் சுதந்திரன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முகாமில் மாற்றுதிறனாளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் சம்மந்தமான உதவி உபகரணங்கள் அடையாள அட்டை மற்றும் பல்வேறு கருவிகள் சம்மந்தமாக மாணவ, மாணவிகளுக்கு மேல்பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 150 பேர் சிகிச்சை பெற்று பயன்பெற்றனர். கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர்கள் துரையரசன், துரைராஜ், அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை பஞ்சவர்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம், பொறுப்பு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட ஒருங்கிணைந்த கல்விதிட்ட அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர். மருத்துவர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karambakudy ,Government Girls School ,
× RELATED உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு