தா.பழூர் அருகே மனைவி,மகன் மாயம்

தா.பழூர் மார்ச் 19: தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் ரோடு தெருவை சேர்ந்தவர் பாபு (37). இவர் அங்கராயங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் வேம்பு என்பவரை திருமணம் செய்துள்ளார். மூன்று வயதில் பிரகதீஸ்வரன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு வெளிநாடு சென்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து தனது மனைவிக்கு போனில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறி குழந்தையை தூக்கி கொண்டு சென்றவர் மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து தனது மாமனாரிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. ஆகையால் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து உறவினர் மற்றும் தெரிந்தவர் வீடுகளில் தேடிப்பார்த்தும் தனது மனைவி, மகன் கிடைக்காததால் தா.பழூர் காவல் நிலையத்தில் மனைவி மகனை கண்டுபிடித்து தர கோரி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Related Stories: