காரைக்கால், மார்ச் 19: காரைக்காலில் இருந்து நாகூர் நோக்கி கருவேல விறகு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மேலவாஞ்சூர் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள எடை மேடைக்கு லாரியை ஓட்டுநர் திருப்பியுள்ளார். எடைமேடையில் லாரி ஏறாததால், லாரியை பின்புறமாக இயக்கினார். அப்போது சாலை ஓரமாக படுத்திருந்தவரின் கால் மீது பின் சக்கரம் ஏறியது. இதில் கால் எலும்பு நொறுங்கியது. உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.