×

அரவக்குறிச்சி ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சியில் புதிய தடுப்பணை

கரூர், மார்ச் 19: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட சின்னம்பட்டி, நல்லகுமரன்பட்டி, தேத்துப்பட்டி, பண்ணப்பட்டி, ஜமீன் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரவக்குறிச்சி ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சியில் சின்னம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 7.55 லட்சம் மதிப்பில் சின்னம்பட்டி ஓடையில் நடுவே கட்டப்பட்டுள்ள தடுப்பணையையும், நல்லகுமரன்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள துவரை மற்றும் முருங்கை பயிர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் மண் வரப்பு அமைக்கும் பணிகளையும், எருமார்பட்டி ஊராட்சி பண்ணப்பட்டியில் ரூ. 22.65 லட்சம் மதிப்பில் நடந்து வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும், ஜமீன் ஆத்தூரில் பொது நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொது கழிப்பறை சீரமைக்கும் பணி, தெத்துப்பட்டி ஊராட்சியில் ரூ. 1.65 லட்சம் மதிப்பில் நடக்கும் கிராம நூலக கட்டிட பணி போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் இந்த ஆய்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் 157 கிராமப்புற நூலகங்கள் உள்ளன. இதில், 52 நூலகங்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டு அவற்றை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கரூர் ஒன்றியத்தில் 14 நூலகங்களில் 5 நூலகங்கள் ரூ. 8.25 லட்சம் மதிப்பிலும், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள 17 நூலகங்களில் 6 நூலகங்கள் ரூ. 10.2 லட்சம் மதிப்பிலும், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 30 நு£லகங்களில் 9 நு£லகங்கள் ரூ. 12.57 லட்சம் மதிப்பிலும், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள 13 நு£லகங்களில் 4 நூலகங்கள் ரூ. 5.45 லட்சம் மதிப்பிலும், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள 23 நூலகங்களில் 8 நூலகங்கள் ரூ. 10.34 லட்சம் மதிப்பிலும், கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 நூலகங்களில் 7 நூலகங்கள் ரூ. 9.64 லட்சம் மதிப்பிலும், தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 நூலகங்களில் 7 நூலகங்கள் ரூ. 12.21 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 52 நூலகங்கள் ரூ. 76.81 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயககுநர் மந்திராச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஷ்வரி, கிருஷ்ணமூர்த்தி உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

Tags : Aravakurichi Union ,Kottaiyur ,
× RELATED அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பசு, எருமையை தாக்கும் புரூசெல்லோசிஸ் நோய்