×

கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் உழவர் விழா

கிருஷ்ணராயபுரம், மார்ச் 19: கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாயனூர் சமுதாய கூடத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கவேல் முன்னிலையில் உழவர் விழா நடைபெற்றது. இதில் மாநில விரிவாக்க திட்டத்திற்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் குறித்து கிருஷ்ணராயபுரம் வட்டார விவசாயிகளிடம் விளக்கி கூறப்பட்டது.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் மாதிரிகள் மற்றும் நீர் பரிசோதனை செய்து தங்கள் விவசாய நிலத்திணை மேம்படுத்தி நல்ல விதைகளை கொண்டு விவசாயம் செய்யுமாறும் மண் மற்றும் நீர் பரிசோதனை எவ்வாறு செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. விவசாயிகள் சிறுதானியங்கள் பயிர் வகைகள் பயிடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும் விவசாய நிலத்திற்கு நுண்ணுயிர் உரம் பயன்படுத்துதல், ஊடுபயிர்கள் விளைவித்தல், தேனீ வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல் போன்றவை குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

அரசு மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்வதில் 8 வகையான பரிசோதனைகளும் மற்றும் நீர் பரிசோதனையும் ரூபாய் 20 ரூபாய்க்கு மட்டுமே கட்டணமாக செலுத்தி விவசாயிகள் எளிதில் பயன் பெறலாம் என கூறப்பட்டது. இதில் வேளாண்மை அலுவலர்கள் ஜெயபாரதி, ப்ரியா சரண்யா, இந்தியா வேளாண் அறிவியல் மைய திருமுருகன், தனியார் விவசாய கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Farmers Festival ,Mayanur ,Krishnarayapuram ,
× RELATED பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள்...