இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

கம்பம், மார்ச் 19: கம்பத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாபரி பள்ளிவாசல் ஜமாத் முன்னாள் தலைவர் பாபா முகமதுபதுருத்தீன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை, தேனி மாவட்ட பொருளாளர் அன்வர் அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், ‘ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் இஸ்லாமிய அடிப்படையில் தீர்ப்பு கூறாமல் முஸ்லிம்களுக்கு அநீதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: