×

வீரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு

மேலூர், மார்ச் 19: கீழவளவில் உள்ள வீரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். மேலூர் அருகே கீழவளவில் உள்ள வீரகாளியம்மன் மற்றும் பரிவார தேவதைகள், பெரியமந்தை ஆலயத்தில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற யாகசாலையை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவிற்காக கீழவளவு, வாச்சாம்பட்டி, வடக்கு வலையபட்டி, சருகுவலையபட்டி, தனியாமங்கலம், இ.மலம்பட்டி, கீழையூர், செம்மினிப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் 30 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.

முன்னதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு கிராமத்தின் சார்பாக அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. சிறப்பு வேள்வி நடத்துனர் இ.மலம்பட்டி கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் நான்கு கரை வேளாளர்கள் சிறப்பு யாக சாலை பூஜை செய்தனர். மேலூர் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags : Veerakaliamman Temple ,Kumbabhishekam ,Minister ,P. Murthy ,
× RELATED மேலூர் அருகே பயங்கரம் வாலிபர் மீது...