×

ஹிஜாப் விவகாரம் குன்னூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

குன்னூர், மார்ச் 19: கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை திரும்ப பெறக்கோரி குன்னூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குன்னூர் விபி தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணை தலைவர் உமர் மற்றும் மாவட்ட பொருளாளர் ஹக்கீம் தலைமை வகித்தனர். இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

மத அடையாளங்களை அணிந்து கொண்டு வரக்கூடாது எனும் காரணத்தை சொல்லி இஸ்லாமிய பெண்களே வகுப்புக்கு வராமல் தடுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.ஹிஜாப் விவகாரம் குன்னூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

குன்னூர், மார்ச் 19: கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை திரும்ப பெறக்கோரி குன்னூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குன்னூர் விபி தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணை தலைவர் உமர் மற்றும் மாவட்ட பொருளாளர் ஹக்கீம் தலைமை வகித்தனர். இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

மத அடையாளங்களை அணிந்து கொண்டு வரக்கூடாது எனும் காரணத்தை சொல்லி இஸ்லாமிய பெண்களே வகுப்புக்கு வராமல் தடுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...