×

அண்ணா தொழிற்சங்கத்தினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 17:அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள சேலம் கோட்ட போக்குவரத்து தலைமை அலுவலகம்  முன்பு  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் ராசு ஆகியோர் பேசினர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடித்து வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக ₹5 ஆயிரம் வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு சீருடை, காலணிகள் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தொழிற்சங்க சேலம் மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியன், சித்ரா, நிர்வாகிகள் அனுப்பூர் தங்கரத்தினம், ராஜ்குமார், நல்லப்பன், பாலு, கந்தசாமி, சித்துராஜ், சுந்தரபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Anna ,Saleh ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு