பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சேலம், மார்ச் 17:சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 2021ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடுமாசு கட்டுப்பாடுவாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தங்களை முழுமையாக அர்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது சேலம் மாவட்டத்தில் 3 பேருக்கு தலா ₹1 லட்சம் வீதம் பண முடிப்புகள் வழங்கப்பட உள்ளது.

கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 3 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுளளது. எனவே, தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: