வத்திராயிருப்பில் வாட்டுது வெயில் மலையடிவார தோட்டங்களுக்குள் படையெடுக்கும் வனவிலங்குகள் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை அவசியம்

வத்திராயிருப்பு, மார்ச் 17: வத்திராயிருப்பு பகுதியைச் சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. மீனாட்சிபுரம், புதுப்பட்டி பகுதி கான்சாபுரம், அத்திக்கோயில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, நெடுங்குளம் பகுதி தாணிப்பாறை உள்ளிட்ட மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, பலா, தேக்கு, சப்போட்டா உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளது. இந்த மலையடிவார பகுதிகளுக்கு வரும் யானை, காட்டுமாடு, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தி வருகிறது. மேலும், மரங்களில் உள்ள பழங்களையும் அழித்து விடுகிறது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வனவிலங்குகளை மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வரவிடாமல் தடுப்பதற்கான எந்தவித தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்ைல. விவசாயிகளுக்கு உரிய பட்டாசுகள் வழங்காமலும் சேதமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் அல்லல்பட்டு வந்தனர். ேமலும், தோட்டங்களுக்கு வராமல் தடுப்பதற்கான அகழிகள் மண்மேவி இருக்கிறது. இதனால், யானை போன்ற வனவிலங்குகள் தோட்டங்களுக்குள் எளிதாக நுழைந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘அகழிகள் தோண்டப்படுவதோடு மலையடிவாரப்பகுதியில் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும். அத்திக்கோயில் மற்றும் தாணிப்பாறை உள்ளிட்ட இடங்களில் கூடாரம் அமைத்து இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து ெசல்ல வேண்டும். தற்போதைய நிலையில் கோடைகாலம் ஆரம்பித்துள்ளதால் மலையில் உள்ள வனவிலங்குகள் இரை தேடுவதற்காகவும், தண்ணீருக்காகவும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, வனவிலங்குகள் வரவிடாமல் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: