தேனியில் தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

தேனி, மார்ச் 17: தேனி மாவட்ட பெண்கள் சமூக பொருளாதார முன்னேற்ற சங்கம் சார்பாக தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு நேற்று தேனி பங்களா மேட்டில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளீதரன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி, பங்களா மேட்டில் துவங்கி நேரு சிலை, பெரியகுளம் சாலை வழியாக தேனி நகர சுகாதார நிலையம் வரை சென்றது. இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவர்கள் தேசிய தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டீசர்ட்டுகளை அணிந்தும் பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். இப்பேரணியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன், உதவி இயக்குனர் சாமி, மாவட்ட தடுப்பு-கட்டுப்பாடு அழகு திட்ட மேலாளர் பரூக் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: