×

ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜை

சாயல்குடி, மார்ச் 17: கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி பகுதி ஐயப்பன் கோயில்களில் பங்குனி மாத முதல் நாள் பூஜை நேற்று நடந்தது. கேரள மாநிலம் சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாள் நடை திறப்பது வழக்கம். அப்போது அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். கடலாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள சபரிதோட்டம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.  குருநாதர் கருப்பையா தலைமையும், சற்குரு மகேந்திரபாண்டியன் முன்னிலையும் வகித்தனர். ஐயப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதேபோல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள தர்மசாஸ்தா கோயிலில்  ஐயப்பனுக்கு நெய், பால், இளநீர் உள்ளிட்ட 11 வகை அபிஷேகம் நடந்தது.  பொங்கலிட்டு, பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொங்கல் அன்னதானம் வழங்கப்பட்டது.

முதுகுளத்தூர் சுப்ரமணியர் கோயில் மற்றும் வழிவிடு முருகன் கோயிலுள்ள ஐயப்பன், சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஐயப்பன், சிவன் கோயிலுள்ள ஐயப்பன், சிக்கல் ஊரணிகரையிலுள்ள ஐயப்பன், கமுதி கோட்டைமேடு ஐயப்பன், அபிராமம் அச்சன்கோயில் ஐயப்பன் கோயில்களில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு நெய் அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.  இந்நிகழ்ச்சிகளில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Panguni Puja ,Iyappan Temple ,
× RELATED புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை...