ராஜபாளையத்தில் அய்யனார் கோயில் சாலையில் வீசப்படும் பூ மூட்டைகள்

ராஜபாளையம், மார்ச் 15: ராஜபாளையம் மேற்கு மலைத்தொடர்ச்சி அய்யனார் கோயில் பகுதியை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத்தலமாக அறிவித்தனர். அதன்பின், நகர் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டருக்கு மேல் சாலையை விரிவுப்படுத்தி புதிதாக தார்ச்சாலை அமைத்தனர். ஆனால், தற்போது வரை அய்யனார் கோயில் நீர்வீழ்ச்சி பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இந்நிலையில், இந்த புதிய தார்ச்சாலையை சிலர் ஆக்கிரமித்து தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவித்து சில ஆண்டுகள் ஆனநிலையில், சாலைப் பணிகள் மட்டும் முடிந்துள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் விலை போகாத பூக்களை சிலர், இந்த சாலையில் கொட்டி செல்கின்றனர். சாலையில் சிதறிக்கிடக்கும் பூ மூட்டைகளாலும், பூக்களாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories: