×

ஆண்டிபட்டி அருகே முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கண்ணகி வழிபட்ட தலம்

ஆண்டிபட்டி, மார்ச் 15: ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோயில் மூலவரான முத்தாலம்மனுக்கும் துணை பரிவார தெய்வங்களான செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோயில் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

இதில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கற்புக்கரசி கண்ணகி தனது கணவன் கோவலன் மதுரையில் பாண்டிய நெடுஞ்செழியனின் தவறான தீர்ப்பு  தண்டனையால்  கொலையுண்டு இறந்ததை அடுத்து மதுரையை தனது கற்பின் வலிமையால் தீக்கிரையாக்கிவிட்டு தற்போது கேரளா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள கண்ணகி கோட்டத்திலிருந்து  புஷ்பகவிமானம் மூலம் வானுலகம் சென்றதாகவும், மதுரையிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை வழியாக செல்லும் வழியில் ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் முத்தாலம்மன் மற்றும் சப்த கன்னிமார்களை வழிபட்டு சென்றதாக இக்கோயில் பற்றி சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது சிறப்புடையது.

Tags : Muthalamman Temple ,Andipatti ,Kumbabhishekam festival ,
× RELATED முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் தேரோட்டம்