×

கொல்லிமலைக்கு தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல தடை

சேந்தமங்கலம், மார்ச் 15: கொல்லிமலைக்கு எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க 49 வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கொல்லிமலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மலைப்பகுதியில் உள்ள மரங்களில் இருந்து இலைகள் கீழே கொட்டி வருகிறது. கடந்த இருதினங்களுக்கு முன்பு, சாலையோரம் கிடந்த சருகுகளில் தீப்பிடித்தது.

இதையடுத்து வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொல்லிமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. மேலும் மலைப்பகுதியில் அமர்ந்து மது அருந்த கூடாது. பீடி, சிகரெட் குடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து காரவள்ளி சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மலைப்பகுதியில் தீவிபத்து ஏற்படாமல் இருக்க, 49 வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொல்லிமலை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தீ விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை