முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஏழை, எளியோருக்கு அன்னதானம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

ஊத்துக்கோட்டை: சீத்தஞ்சேரி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கினார். ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி கிராமத்தில் பூண்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சுப்பிரமணி, துணைச்செயலாளர் நாகராஜ், நிர்வாகிகள் ரகு, தேவி, வக்கீல் வெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில், பொதுக்குழு உறுப்பினர் அபிராமி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத்,  துணைத்தலைவர் குமரவேல், பூண்டி ஒன்றிய நிர்வாகிகள் வக்கீல் ஜான் பொன்னுசாமி, ஜெயச்சந்திரன், கஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: