×

தேன்கனிக்கோட்டை அருகே தமிழ் தெரியாத வங்கி மேலாளரை மாற்றக்கோரி திடீர் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 12:  தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளி கிராமத்தில் தேசிய வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள வங்கியின் மேலாளருக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாததால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலாளருக்கு தமிழ் தெரியாததால் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கடனுதவி கேட்டு செல்லும் போது அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், வங்கியில் குறைந்த அளவே பணியாளர்கள் உள்ளனர். இதனால் அடிக்கடி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே தகராறு ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று, வங்கியின் முன்பாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மொழி தெரியாத மேலாளரை மாற்றவேண்டும். வங்கியில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, வங்கி சேவையை சீர்செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாகரத்தினா, சந்திரசேகர், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் சங்கரி, ஜேம்ஸ் அஞ்சலாமேரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க அனுமப்பா, வெங்கடேஷ், சீனிவாசன், பட்டாபிராமன், வெண்ணிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Tenkanikottai ,
× RELATED தேன்கனிகோட்டை அருகே சாலையை கடந்து சென்ற 20 யானைகள்-கிராம மக்கள் பீதி