கால்நடை மருத்துவ முகாம்

வருசநாடு, மார்ச் 12: மேகமலை மலைக்கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு, பெரியகுளம் கால்நடை கோட்ட உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கால்நடை மருத்துவர்கள் வெயிலான், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டனர். மேலும், கால்நடைகளுக்கு சத்து டானிக், மருந்து மாத்திரை தாது உப்பு ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், இளங்கன்று முறையாக வளர்த்த கால்நடை வளர்ப்போருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories: