×

இருமடங்கு கரும்பு பயிரிட திட்டம் கலெக்டர் தகவல்

சிவகங்கை, மார்ச் 12: சிவகங்கை அருகே படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலையில் கரும்பு அரைக்கும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்ததாவது: படமாத்தூர் சக்தி சக்கரை ஆலை இப்பகுதி விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு காரணமாக செயல்படாமல் இருந்து வந்த ஆலை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தொ டர்ந்து 4 முதல் 5 மாதங்கள் வரை இப்பகுதியில் உள்ள சுமார் 5000க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து கரும்புகள் பெறப்பட்டு அரைக்கப்பட உள்ளன. அதனைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் இருந்தும் கரும்புகள் கொள்முதல் செய்து தொடர்ந்து இந்த ஆலை இயங்கும் அளவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக வரும் ஆண்டில் மாவட்டத்தில் இன்னும் இரண்டு மடங்கு எண்ணிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட உள்ளனர். அந்த அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது குறித்து ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு போதிய ஆலோசனை வழங்கியுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆலை தலைமை நிர்வாக பொது மேலாளர்கள் சிவக்குமார்(நிர்வாகம்), ஜெகநாதன்(தொழில் நுட்பப்பிரிவு) மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு