×

தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

காரைக்குடி, மார்ச் 12: காரைக்குடி அருகே கல்லலில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபரமேஸ்வரி வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன் தலைமை வகித்து 136 பயனாளிகளுக்கு அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கம் வழங்கினார். மேலும் பெண்களுக்கு திருமண நிதி உதவியும் வழங்கப்பட்டது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tali ,
× RELATED அரசு பள்ளியில் ஆண்டு விழா