×

ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு வாரிய இடங்கள் மீட்கப்படும் தலைவர் அப்துல் ரகுமான் பேட்டி

திண்டுக்கல், மார்ச் 12: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வக்பு வாரிய சொத்துக்களை வக்பு வாரியம் கண்காணித்து வருகிறது. வக்புவாரிய சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, போலி பத்திரங்கள் மூலம் விற்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இவைகளை மீட்பதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். திண்டுக்கல்லில் பேகம்பூர் வக்பு வாரிய இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, மசூதிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை நீதிமன்றம் சென்று வென்று‌ள்ளோம்.

பேகம்பூர் மசூதி நிர்வாகத்துக்கு சொந்தமான 65.84 ஏக்கர் நிலம் நீதிமன்றத்தால் மீட்கப்பட்டுள்ளது. இந்த குளமாக இருப்பதால் அதை மக்கள் பயன்படுத்த வக்புவாரியம், மசூதி நிர்வாகத்துடன் சேர்ந்து நல்ல முடிவெடுக்க வேண்டும். அதைப்போல் திண்டுக்கல் மெயின்ரோட்டில் 18,355 சதுரடி நிலப்பரப்பில் வர்த்தக மையம் அமைக்க கூடிய இடமாக உள்ளது. அந்த இடத்தை வாடகைக்கு கேட்கின்றனர். வக்பு வாரிய சட்டத்துக்கு உட்பட்டு, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் மசூதி நிர்வாகத்தினர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Abdul Raguman ,Waqf Board Seats ,
× RELATED தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த...