பரமத்திவேலூரில் நலச்சங்கம் தொடக்க விழா

பரமத்திவேலூர், மார்ச் 10: பரமத்திவேலூர் தாலுகா, ரியல் எஸ்டேட் நிலத் தரகர்கள் நலச் சங்கம் தொடக்க விழா, வீரணம்பாளையத்தில் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த சங்கத்தில், தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இன்ஜினியர் வேலுசாமி, சண்முகம், மகேஷ் ஆகியோர் கௌரவ தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத் தலைவராக மாரப்பா செந்தில், செயலாளராக குமாரசாமி, பொருளாளர்களாக செந்தில்குமார், பொன்னிகுமார் ஆகியோரும், துணைத் தலைவர்களாக ரத்தினசபாபதி, டால்பின் சுரேஷ், கமலநாதன், ஜெயசேகர் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வேலூர் கண்ணன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: