மகளிர் தினத்தையொட்டி பிஷப் தார்ப் கல்லூரி மாணவிகள் ரத்த தானம்

தாராபுரம், மார்ச் 10:  தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரி, ஆரம்ப சுகாதார  நிலையம் இணைந்து உலக மகளிர் தினத்தையொட்டி மாணவிகள் ரத்ததானம் செய்தனர். நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் இந்த முகாம் கல்லூர் வளாகத்தில் நடந்தது. இதில், மாணவிகள் உள்பட 120க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர்.நிகழ்ச்சியில், தாராபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் டாக்டர் தேன்மொழி, அரசு மருத்துவமனை ரத்த வங்கி கண்காணிப்பாளர் டாக்டர் சக்தி ராஜ், பிஷப் தார்ப் கல்லூரியின் முதல்வர் டாக்டர் உதயகுமார் திட்ட அலுவலர் ஏஞ்சலின் பிரபா, கல்லூரி நிதி நிர்வாகி மலர் ஸ்டீபன், ராஜேஷ் திட்ட அலுவலர் குழுவினர் முகாமில் கலந்து கொண்டனர்.

Related Stories: