×

முதுமலையில் வறட்சி நிலவுதால் காமராஜர் சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

ஊட்டி,மார்ச்8: கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் முதுமலையில் வறட்சி நிலவி வருகிறது. வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் காமராஜர் சாகரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நிலவி வரும் கடும் உறைபனி பொழிவு காரணமாக மரங்கள், செடி,கொடிகள் காய்ந்து கருகி போய் வனங்கள் பசுமை இழந்து காட்சியளிக்கின்றன. பகலில் வெயில் கொளுத்துவதல் நீர் நிலைகளில் வறண்டுள்ளன. இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகத்திலும் கடுமையான வறட்சி நிலவும் நிலையில் வனவிலங்குகளின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காட்டு தீ அபாயம் உள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடைேய ஆண்டுதோறும் கோடை காலத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஊட்டி - கூடலூர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுபாட்டில் உள்ள காமராஜர் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகையில், கோைட துவங்கியுள்ள நிலையில் முதுமலையில் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் மின்வாரியம் காமராஜ் சாகர் அணையை உடனே திறந்துவிட வேண்டும். இந்த தண்ணீர் கல்லட்டி அருவி, பொக்காபுரம், சிங்காரா உள்ளிட்ட வனப்பகுதி வழியாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் செல்லும், என்றனர்.

Tags : Kamaraj Sagar Dam ,Mudumalai ,
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்