×

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாணவர்களின் பாரம்பரிய நடைபயணம் தொடக்கம்: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

சென்னை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுகூரும் வகையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பாரம்பரிய நடைபயணத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தார்.  உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ம் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுலா அமைப்பு ‘சுற்றுலாவும் அதன் உள்ளடங்கிய வளர்ச்சியும்’ என்கிற கருப்பொருளை வலியுறுத்தியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் விதமாக நேற்று, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுகூரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய நடைபயணத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், தொழிலாளர்கள்  நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கிர்லோஷ் குமார்,  சுற்றுலா இயக்குநர் மற்றும்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப்  நந்தூரி, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் அரசு உயர்  அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நடைபயணம், சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி சட்டமன்ற  கிங்ஸ் பேரக், க்ளைவ் மாளிகை, கார்ன்வாலிஸ் க்யூபோலா, கோட்டை அருங்காட்சியம், வடக்கு தெரு, பரேடு ஸ்கொயர்,  புனித மேரி ஆலயம், வாலாஜா கேட், தூய தாமஸ் கேட், தூய தாமஸ் தெரு, புனித ஜார்ஜ் கேட் வரை  நடைபெற்றது….

The post உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாணவர்களின் பாரம்பரிய நடைபயணம் தொடக்கம்: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : World Tourism Day ,Minister ,Madivendan ,CHENNAI ,Mathiventhan ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...