×

இடங்கணசாலை நகராட்சி தலைவராக கமலக்கண்ணன் தேர்வு தளபதி துணைத்தலைவரானார்

இளம்பிள்ளை, மார்ச் 5:  இடங்கணசாலை நகராட்சியின் முதல் தலைவராக திமுகவைச் சேர்ந்த கமலக்கண்ணன், துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த தளபதி ஆகியோர் பதவியேற்றனர். சேலம் மாவட்டத்தில் இடங்கணசாலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக தேர்தலை சந்தித்தது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 15 இடத்தையும், பாமக 8 இடத்தையும், அதிமுக 2 இடத்தையும், சுயேச்சை 2 இடத்தையும் கைப்பற்றியது.

நேற்று நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், 12 வது வார்டு உறுப்பினருமான கமலக்கண்ணன், துணைத்தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த 7வது வார்டு உறுப்பினர் தளபதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருவருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags : Kamalakkannan ,Deputy Chairman ,Idanganasalai ,
× RELATED அரசின் 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம்...