×

25 ஆண்டுகளுக்கு பிறகு காரியாபட்டியில் பேரூராட்சி தலைவராக திமுக கவுன்சிலர் தேர்வு

காரியாபட்டி, மார்ச் 5: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இதுவரை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வந்தனர். அதிமுகவின் கோட்டையாக இருந்த காரியாபட்டி பேரூராட்சியை திமுக முதல் முறையாக கைப்பற்றி பேரூராட்சி சேர்மனாக 10வது வார்டில் வெற்றி பெற்ற திமுக நகர செயலாளர் செந்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவராக உருவி சந்தோஷம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மல்லாங்கிணறு பேருராட்சியில் 4வது வார்டில் வெற்றி பெற்ற மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் துளசிதாஸ் தலைவராக தேர்வனார். 8வது வார்டு உறுப்பினர் மிக்கேலம்மாள் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்திப் பேசினார். அப்போது மக்களுக்கான நலத்திட்டங்களை செய்யும் பேரூராட்சி நிர்வாகமாக செயல்படும் என கூறினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Kariyapatti ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி