×

அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்வு

அருப்புக்கோட்டை, மார்ச் 5: அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 21வது வார்டு கவுன்சிலர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான பாஸ்கரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் சுந்தரலட்சுமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரன் அறிவித்தார். சுந்தரலட்சுமி ஏற்கனவே நகர்மன்ற தலைவராக 2 முறை இருந்த சிவப்பிரகாசம் என்பரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மாமனாரும் நகர்மன்றத்தலைவராக இருந்துள்ளார். தொடர்ந்து துணை தலைவர் பதவிக்கு 27வது வார்டு உறுப்பினர் பழனிச்சாமி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில் பழனிச்சாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னால் எம்எல்ஏ விஜயக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், திமுக நகர செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சோலையப்பன், நகரவைத்தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Aruppukottai Municipal Chairman ,Vice Chairman ,
× RELATED சீர்மரபினருக்கு ஒற்றை சான்றிதழ்...