×

சாத்தூர் நகராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு

சாத்தூர், மார்ச் 5: சாத்தூர் நகராட்சி 24 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக 18, மதிமுக 2, சிபிஎம் 1, அதிமுக 1, அமமுக 1 சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 21 வார்டுகளை பிடித்ததால், திமுக தனிப்பெரும்பான்மை பெற்று நகராட்சியை கைப்பற்றியது. மார்ச் 2ம் தேதி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில் நேற்று தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது.

சாத்தூர் நகராட்சியில் 14வது வார்டு பகுதியில் போட்டியிட்ட திமுக நகர செயலாளர் குருசாமி சேர்மன் வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாததால் சாத்தூர் நகராட்சியின் சேர்மனாக குருசாமி ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையாளர் நித்தியா அறிவித்தார். தொடர்ந்து குருசாமி சேர்மனாக பதவி பிரமாணம் ஏற்று கொண்டார். அவருக்கு வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Sattur mayor ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...