×

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

அருப்புக்கோட்டை, மார்ச் 5: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சூர்யகுமாரி, வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் காஜா மைதீன் பந்தே நவாஸ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
வட்டார வளர்ச்சி அலுவலர்- ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வேலைகளை ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கவுன்சிலர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து தேர்வு செய்யுங்கள்.
கோவிந்தசாமிநாதன்- ஊராட்சி ஒன்றியத்தில் என்ன நிர்வாகம் நடக்கிறது என்று கவுன்சிலர்களுக்கு தெரியவில்லை. ஊராட்சிகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறீர்கள். கவுன்சிலர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஒரு கவுன்சிலருக்கு 5 லட்சம் ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்து வேலை கொடுத்தால் போதுமா?
சீனிவாசன்- 100 நாள் வேலை செய்பவர்களை வைத்து கிராமப்புறங்களில் தூய்மை பணி செய்யுங்கள்.

பண்டாரச்சாமி- பந்தல்குடி- புதூர் விலக்கில் வாகனங்கள் செல்வதற்கு முறையான வழி இல்லை. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ரவுண்டானா போட வேண்டும். உதயசூரியன்- மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தில் வருகிற நிதியை ஊராட்சிக்கு மட்டும் தருகிறீர்கள். கவுன்சிலர்களுக்கும் வேலையை பிரித்து கொடுங்கள். பசுபதி- ஒன்றிய கவுன்சிலருக்கு உட்பட்ட பகுதிகளில் அடிகுழாய், மினிபவர் பம்ப் போன்ற வேலைகளுக்கு எழுதி கொடுத்தால் எதுவும் செய்வதில்லை.

அழகுசக்தி- ஆமணக்குநத்தம், கல்லுப்பட்டி சாலை குறுகலாக உள்ளதால் கிராம மக்கள் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. சாலையை அகலப்படுத்த வேண்டும். ஆமணக்குநத்தம், செட்டிக்குறிச்சி இணைப்பு சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Aruppukottai Panchayat ,Union Committee Meeting ,
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்