×

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு பிஇ, பிடெக் படிப்பில் 6,442 ‘சீட்’ கிடைத்து: மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட, 7.5 சதவீத முன்னுரிமையின் கீழ் 6,442 பிஇ, பிடெக் படிப்புக்கான இடங்களை மாணவ -மாணவியர் தேர்வு செய்துள்ளனர்.  தமிழகத்தில். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் கல்வி படிப்புகளில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில்  குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரையின் பேரில், தொழில் கல்வி படிப்புகளான பொறியியல், கால்நடை, மீன்வளம், சட்டம், வேளாண்மை, உள்ளிட்ட படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம்  சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்டது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பொறியியல் படிப்புகளில் பிஇ, பிடெக் பட்டப் படிப்பில் மேற்கண்ட சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் செய்தது. அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்த மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேருக்கு பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் தனியாக வெளியிடப்பட்டது. அதில் பொதுப்பிரிவில் 15,161 மாணவ மாணவியரும், தொழில் கல்வி பிரிவில் 4,99 பேரும் தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.  இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தவர்களில்  முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்கள் 48 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 4 பேருக்கும், மாற்றுத்  திறனாளி மாணவர்கள் 20 பேருக்கும்  கடந்த 15ம் தேதி ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடந்தது. இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை கடந்த 20ம் தேதி முதல்வர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 4 பேர், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 18 பேரும், விளையாட்டுப் பிரிவில் 32 பேரும், பொதுப்பிரிவின் கீழ் 5837 பேரும், தொழில் கல்வி பிரிவில் 81 பேரும் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர்….

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு பிஇ, பிடெக் படிப்பில் 6,442 ‘சீட்’ கிடைத்து: மாணவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bitech ,Chennai ,PITEK ,
× RELATED BE மற்றும் பிடெக்கிற்கு மே முதல்...