×

இளையான்குடி பேரூராட்சி தலைவர் ஒருமனதாக தேர்வு

இளையான்குடி, மார்ச் 5: இளையான்குடி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இளையான்குடி பேரூராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், அதிகபட்சமாக திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது. அதனால் இளையான்குடி பேரூராட்சி தலைவர் பதவி திமுகவிற்கே உரிமை கோரும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக 8 வது வார்டு உறுப்பினர் செய்யது ஜமிமா இளையான்குடி பேரூராட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் செயல் அலுவலர் கோபி, தலைவர் செய்யது ஜெமிமாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாலை 3 மணிக்கு நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில், 9வது வார்டு திமுக உறுப்பினர்கள் சவுரியத்து பீவி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : Ilayankudi ,
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை