மேலூர், உசிலம்பட்டி நகராட்சியை கைப்பற்றி திமுக சாதனை

மேலூர்/ உசிலம்பட்டி, மார்ச் 5: மேலூர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சியில் திமுகவை சேர்ந்தவர்களே தலைவராக நேற்று தேர்தெடுக்கப்பட்டனர்.

மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 24 வார்டுகளை கைப்பற்றி திமுக பெரும்பான்மை பெற்றது. இதில் 8வது வார்டில் போட்டியிட்ட மேலூர் நகர் திமுக செயலாளர் முகமது யாசின், நகராட்சி தலைவராக நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து 14 வார்டில் வெற்றி பெற்ற இளஞ்செழியன் துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

* உசிலம்பட்டி நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல், நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முன்னிலையில் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் திமுக -12, காங்-1 என 13 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மையுடன் இருந்ததது. திமுக சார்பில் 10வது வார்டில் வென்ற செல்வி நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட திமுக 11வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா விருப்ப மனு அளித்தார். இதையடுத்து நடந்த தலைவர் தேர்தலில் திமுக 12, காங். 1, அதிமுக 9, அமமுக 2 என 24 வார்டு உறுப்பினர் வாக்கு செலுத்தினர். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. முடிவில் திமுக வேட்பாளர் சகுந்தலா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செல்வி 6 வாக்குகளுடன் தோல்வியடைந்தார்.

Related Stories: