×

மதுரை மாநகராட்சியை மாற்ற செயல்படுவேன் துணைமேயர் பேட்டி

மதுரை, மார்ச் 5:மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் சார்பில் அறிவிக்கப்பட்ட ஜெய்ஹிந்த்புரம் 80வது வார்டு கவுன்சிலரான நாகராஜன் நேற்று மதியம் மாநகராட்சி மாமன்றக்கூடத்தில் நடந்த மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், பூங்கொத்து கொடுத்து துணை மேயர் நாற்காலியில் அமர வைத்தார். பிறகு மேயர் இந்திராணி பொன்வசந்த், வெள்ளி செங்கோலை கொடுத்து கவுரவப்படுத்தினார். கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக வந்து இருவருக்கும் சால்வைகளை அணிவித்து கவுரவித்தனர்.

துணை மேயர் நாகராஜன் கூறுகையில், ‘‘மதுரையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியாக ரூ.500கோடியை வழங்கியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு வெகுவாக அமல்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை நகரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இந்த வரலாற்று சிறப்பு மிக்க பெருமை வாய்ந்த மதுரை மாநகராட்சியை தமிழகத்திலேயே முன்னுதாரணமான மாநகராட்சியாக செயல்படுவதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவேன்’’ என்றார்.

Tags : Madurai Corporation ,
× RELATED 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு சான்றிதழில்...