×

திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவராக திமுகைவை சேர்ந்த குமார் பதவியேற்றார்

திருப்பூர், மார்ச் 5:  திருப்பூர், திருமுருகன் பூண்டியில் அதிமுக கோட்டையை உடைத்து நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த குமார் நேற்று பதவியேற்று கொண்டார். திருப்பூர் அருகே உள்ள திருமுருகன் பூண்டி இவ்வாண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 27 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் 17 இடங்களை திமுக கூட்டணியும், 10 இடங்களை அதிமுகவும் கைப்பற்றின. 15 பெண்கள் உட்பட 27 கவுன்சிலர்களாக 2ம் தேதி பதவியேற்றனர்.

இந்த நிலையில் நேற்று நகராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு திமுக சார்பில் குமார், மா.கம்யூ., சார்பில் சுப்பிரமணியம் மனு தாக்கல் செய்தனர். முடிவில் திமுகவை சேர்ந்த குமார் 15 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மா.கம்யூ., சுப்பிரமணியம் 12 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.பின்னர் திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த குமார் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் மதியம் 2 மணிக்கு துணைத் தலைவருக்கு நடந்த தேர்தலில் இ.கம்யூ., கவுன்சிலர் ராஜேஸ்வரி வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் அதிமுக கவுன்சிலர்கள் 10 பேர் வெளிநடப்பு செய்தனர். அதனால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள நேரம் வரை வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ராஜேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்று கொண்டார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக வசம்:
திருமுருகன் பூண்டி பேரூராட்சியாக இருந்த போது 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பேரூராட்சி அதிமுக வசம் இருந்தது. நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட பின் முதல் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றி அதிமுக வின் கோட்டை என்கிற பெயரை தகர்த்துள்ளது.  திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘க்அனைத்து வார்டுகளிலும் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்படும். அதே போல் தெருவிளக்கு, சாக்கடை தூர்வாருதல் போன்ற வேலைகள் உடனடியாக செய்யப்படும், பொதுமக்கள் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய எப்பொது வேண்டுமாலும் என்னை அணுகலாம்.பொதுமக்கள் புகார் செய்ய நகராட்சிக்கு தனியாக வாட்சப் எண் உருவாக்கப்படும்’, என்றார்

Tags : Kumar ,DMK ,Thirumurugan ,Boondi ,
× RELATED பாஜவுடன் கூட்டணியால் 80 ஆயிரம் ஓட்டு...