×

கேத்தி, அதிகரட்டி,சோலூர்,கோத்தகிரி பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் பதவிகளை திமுக., கைப்பற்றியது

ஊட்டி,மார்ச்5: ஊட்டி அருகே கேத்தி, அதிகரட்டி, சோலூர்,  நடுவட்டம் மற்றும் கோத்தகிரி பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை திமுக., கைப்பற்றியது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்தற்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.

கேத்தி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக., 8 வார்டுகளிலும், அதிமுக., 6 வார்டுகளிலும், சுயேட்சை 3 வார்டுகள், ஒரு வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. கேத்தி பேரூராட்சி தலைவர் பதவி பெண் பொது பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தலைவர் பதவிக்கு திமுக., சார்பில் 5வது வார்டு கவுன்சிலர் ஹேமாமாலினியும், அதிமுக., சார்பில் சந்திகா ஆகியோர் போட்டியிட்டனர். தொடர்ந்து மறைமுக தேர்தல் நடந்தது. இதில் ேஹமாமாலினி 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவரானார். அதிமுக., வேட்பாளர் சந்திகா 5 வாக்குகள் பெற்றார். துணை தலைவராக 2வது வார்டு திமுக., கவுன்சிலர் விக்டர் வசந்த் போட்டியின்றி தேர்வானார்.

அதிகரட்டி பேரூராட்சியில் 2வது வார்டு திமுக., கவுன்சிலர் பேபியும், துணைத் தலைவராக செல்வனும் போட்டியின்றி தேர்வாகினர். சோலூர் பேரூராட்சியில் திமுக., சார்பில் 2வது வார்டு கவுன்சிலர் கெளரியும், சுயேட்சை வேட்பாளர் விஜயலட்சுமியும் போட்டியிட்டனர்.இதில் திமுக., கவுன்சிலர் கெளரி 9 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வானார். விஜயலட்சுமி 6 வாக்குகள் பெற்றார். துணை தலைவராக திமுக.,வை 7வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நடுவட்டம் பேரூராட்சியில் திமுக., சார்பில் 7வது வார்டு கவுன்சிலர் கலியமூர்த்தியும், அதிமுக., சார்பில் 3வது வார்டு கவுன்சிலர் பாக்யாவும் போட்டியிட்டனர். இதில் திமுக., கவுன்சிலர் கலியமூர்த்தி 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக தேர்வானார். பாக்கியா 4 வாக்குகள் பெற்றார். துணை தலைவராக 5வது வார்டு திமுக., கவுன்சிலர் துளசி தேவஹரிதாஸ் போட்டியின்றி தேர்வானார். கோத்தகிரி பேரூராட்சியில் 9வது வார்டு திமுக., கவுன்சிலர் ஜெயகுமாரி போட்டியின்றி தலைவரானார். துணை தலைவராக 4வது வார்டு திமுக., கவுன்சிலர் உமாநாத் தேர்வு செய்யப்பட்டார்.

ஜெகதளா பேரூராட்சியில் 9 திமுக 2 காங்கிரஸ் 4  அதிமுகவினர் வெற்றி பெற்றனர். இதில் தலைவர் பதவிக்கு திமுக கட்சி சார்பில் பிரமிளா என்பவரை தலைமை கழகம் அறிவித்தது. இந்நிலையில்  தலைவர் பதவிக்கு பிரமிளா,பங்கஜம் மற்றும் யசோதா ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இதில் 13 வார்டு ‌கவுன்aசிலர் பங்கஜம் 8 வாக்குகளும், பிரமிளா 2 வாக்குகளும், யசோதா 5 வாக்குகள் பெற்றனர். இதில் 13 ஆவது வார்டு கவுன்சிலரான திமுக வேட்பாளர் பங்கஜம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  கட்சி அறிவித்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெகதளா பேரூராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிக்கட்டி பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரலேகா என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து பிற்பகலில் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சுகுமாரன் (திமுக), ஜெயக்குமார் (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 15 கவுன்சிலர்களில் 13 பேர் வாக்களித்தனர். பாஜகவை சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. இதை தொடர்ந்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் 9 வாக்குகளும் சுகுமாரன் (திமுக) 4 வாக்குகளும் பெற்றனர். இதை தொடர்ந்து ஜெயக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags : DMK ,Kathi ,Adikaratti ,Solur ,Kotagiri ,
× RELATED நம் வீடு… நம் ஊர்… நம் கதை…