×

முதல்வர் பிறந்த நாளையொட்டி உணவு கருமத்தம்பட்டி நகராட்சியில் திமுக பொறுப்பாளர் நித்யா மனோகரன் தலைவரானார்

சோமனூர், மார்ச் 5:  புதிதாக தரம் உயர்த்தப்பட்ட கருமத்தம்பட்டி நகராட்சியில் நேற்று தலைவர், துணைத்தலைவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.  இதில், சூலூர் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நித்யா மனோகரன் தலைவரானார். காங்கிரஸ் நிர்வாகியும், சுயேச்சை கவுன்சிலருமான யுவராஜ் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி பேரூராட்சியை தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டசபை மானியக் கோரிக்கையின்போது நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27 வார்டுகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், 14 பெண்களும், 13 ஆண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக சார்பில் 19  உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 2 பேரும், சுயேச்சை 3 உறுப்பினர்களும், அதிமுகவில் 3 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற 27 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுள்ள நிலையில் நேற்று தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

காலை நடைபெற்ற தலைவர் தேர்தலில் சூலூர் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரும் கருமத்தம்பட்டி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சியில் முன்னாள் தலைவருமான நித்யா ஜி.மனோகரன் 22 கவுன்சிலர்கள் ஆதரவுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட பாலசுப்பிரமணியம் 5 ஓட்டுக்களை மட்டும் பெற்றார். மதியம் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், சுயேச்சை கவுன்சிலருமான யுவராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு நகராட்சி ஆணையர் முத்துசாமி சான்றிதழ் வழங்கினார்.

Tags : Chief Minister ,Nithya Manokaran ,Karumathampatti ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...