×

இன்றைய மின்தடை நெல் தரிசில் பயறு வகை சாகுபடி முனைப்பு இயக்கம்

அரியலூர், மார்ச் 5: ஜெயங்கொண்டம் வட்டாரம் கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பாக நெல் தரிசில் பயறுவகை சாகுபடி குறித்த முனைப்பு இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி தலைமையேற்று சிறப்புரை ஆற்றி பேசுகையில், நெல் சாகுபடிக்கு பின் வயலில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் குறுகிய காலத்தில், அதிக வருமானத்தை பெற வாய்ப்புள்ளது எனக் கூறினார். மேலும் திரவ உயிர் உரங்களின் பயன்பாடுகள், நுண்ணூட்ட உரத்தை பயன்படுத்துவதால் திரட்சியான அதிக மகசூலை பெற முடியும் என எடுத்துக்கூறினார். மேலும் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் பயனாளிகள் அனைவரும் தங்களது தனிநபர் விபரத்தின் இ-சேவை மையத்தில் சென்று புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என விவசாயிகளிடத்தில் கேட்டுக்கொண்டார். வேளாண்மை உதவி இயக்குநர் கீதா வேளாண் திட்டம் குறித்து எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் திட்ட பயனாளிகளுக்கு இடுபொருட்களை வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி வழங்கினார். வேளாண்மை துணை அலுவலர் கோவிந்தசாமி, உதவி விதை அலுவலர் ராஜா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோவிந்தராசு, செல்வம் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைஜெயங்கொண்டம் துணை மின் நிலையம், தா.பழுர் துணை மின்நிலையம், உடையார்பாளையம் துணை மின்நிலையம், தழுதாழைமேடு துணை மின்நிலைய பகுதிகள்:ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனுர், இலையூர், புதுக்குடி செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, வடக்கு தெற்கு-ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர்.


Tags : Legume Cultivation Initiative ,Paddy Barley ,
× RELATED நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பம்-வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை