கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

வருசநாடு, மார்ச் 4: கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெரியகுளம் கால்நடை கோட்ட உதவி இயக்குனர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரயா உதயகுமார், கால்நடை மருத்துவர் வெயிலான், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பாலு, அனைத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வருசநாடு அருகே மஞ்சனூத்து மலை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை உதவியாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: