×

இளையான்குடி அருகே பால்குட ஊர்வலம்

இளையான்குடி, மார்ச் 4: இளையான்குடி அருகே அய்யம்பட்டியில் வீரபாண்டிய அய்யனார் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில், பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று முன்தினம் சிவராத்திரியை முன்னிட்டு அய்யம்பட்டி விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்தனர்.
பின்பு வீரபாண்டிய அய்யனாருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அய்யம்பட்டி, குயவர்பாளையம், வடக்கு சாலைக்கிராமம், சாலைக்கிராமம், துகவூர், ஆகிய கிராம மக்களும், குலதெய்வ வழிபாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Balkuda ,Ilayankudi ,
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை