×

போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,414 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

ஈரோடு,  மார்ச் 4:  ஈரோடு மாநகரில் கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறியதாக  6,414 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் வாகன  போக்குவரத்து அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை  மீறி வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை  தடுக்க ஈரோடு வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எஸ்பி  சசி மோகன் உத்தரவிட்டார்.

இதன்பேரில், வடக்கு, தெற்கு போக்குவரத்து  போலீசார் கடந்த மாதம் (பிப்ரவரி) ஈரோடு மாநகரில் ஸ்வஸ்திக் கார்னர், பன்னீர்  செல்வம் பார்க், அரசு மருத்துவமனை ரவுண்டானா, கலெக்ட்ரேட், மூலப்பட்டறை,  மணிக்கூண்டு, கொல்லம்பாளையம், காளைமாட்டு சிலை, சென்னிமலை ரோடு, சூரம்பட்டி  நால் ரோடு, பவானி ரோடு, சத்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கை  மேற்கொண்டனர்.

இதில், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதாக 4,693  வழக்கு, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 181 வழக்கு, செல்போன் பேசியபடி  வாகனத்தை ஓட்டிதயாக 106 வழக்கு, டூ வீலரில் மூவர் சென்றதாக 163 வழக்கு,  போக்குவரத்து சிக்னலை மீறியதாக 82 வழக்கு, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி  சென்றதாக 50 வழக்கு, டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாக 80  வழக்கு, அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாக 20, விபத்து ஏற்படும் வகையில்  தாறுமாறாக வாகனத்தை ஓட்டியதாக 17 வழக்கு மற்றும் இதர வழக்குகள் என மொத்தம்  6,414 வழக்குப்பதிவு செய்து, வாகன ஓட்டிகளுக்கு அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை